அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட உத்தரவு: காலவகாசம் கொடுத்த நீர்வளத் துறை!
bore wells close Order
டெல்லி, கேஷப்பூர் பகுதியில் குடிநீர் வாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இருந்த ஆழ்துளை ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று ஒரு நபர் விழுந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தெரிறமாக ஈடுபட்டு இன்று பிற்பகல் 3 மணி அளவில் நபரை சடலமாக மீட்டர்.
![](https://img.seithipunal.com/media/crime 0221.png)
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் மனிதர்கள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூட டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.