காதலிக்க மறுத்த 17 வயது பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.!
Boy attack acid didn't accept love
கர்நாடகாவில் காதலிக்க மறுத்ததால் 17 வயது பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் இளைஞர் ஒருவர் 17 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணிடம் தன் காதலை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியும், திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனக்கு கிடைக்காத இந்த பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
இதில் அந்தப் பெண்ணின் முகம் மற்றும் கழுத்து முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆசிட் வீசிய இளைஞர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். மேலும், ஆசிட் வீசிய இளைஞர் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Boy attack acid didn't accept love