அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த சிறுவன் - ஓட்டுனருக்கு கொலை மிரட்டல்.!!
boy broke government bus miror in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகரின் பந்தன்அப் பகுதியில் உள்ள சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், இந்தப் பேருந்தை சிறுவன் ஒருவர் வழிமறித்தார்.
பின்னர் தான் வைத்திருந்த வாளால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு, அந்த பேருந்தின் ஓட்டுனருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இந்தச் சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்தச் சிறுவன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியையும், அங்கிருந்த குடிநீர் தொட்டியையும் உடைத்தார். இதனால், பயந்துபோன அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி போலீசார், விரைந்து வந்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனிடம் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உறவினர் கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்தச் சிறுவனை கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
English Summary
boy broke government bus miror in maharastra