சிறுவனுக்கு எமனாக வந்த பட்டம் - தெலங்கானாவில் சோகம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத் அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தில் பதினைந்து வயது சிறுவனான தன்ஷிக் தனது குடும்பத்தாருடன் பட்டம் விட்டு விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது சிறுவன் விட்ட பட்டம் எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசியுள்ளது. இதனால் சிறுவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டம் விட்டதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy died in telangana hydrabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->