மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
Boy dies due to electrocution in thane
தானே மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் வினோத் பரிகார், அப்பகுதியை சேர்ந்த சில சிறுவர்களுடன் அங்குள்ள நீர்நிலைக்கு நீச்சல் அடிப்பதற்கு சென்றுள்ளான்.
அப்பொழுது அங்கு வினோத் பரிகார் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்து மின்கம்பத்தை தொட்டு உள்ளான். அதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வித்தல்வாடி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boy dies due to electrocution in thane