குளத்தில் குளிக்க சென்ற 9 வயது சிறுவன் பலி! - Seithipunal
Seithipunal


காரைக்கால் : திருநள்ளாறில் செருமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். இவரது மகன் முகமது சபியுல்லா (வயது 9). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆடு மேய்க்க தனது தாய் ரம்ஜான் பேகத்துடன் முகமது சபில்லா சென்றுள்ளார். அவர்களது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் முகமது சபியுல்லாவை நிற்க வைத்துவிட்டு, தாய் ரம்ஜான் பேகம் ஓடி சென்ற ஆடுகளை மீட்டு வருவதாக கூறியுள்ளார்.

அப்போது அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளிப்பதாக சிறுவன் முகமது சபியுல்லா தண்ணீரில் இறங்கி உள்ளார். ஆனால், சிறுவனுக்கு நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கியுள்ளார். 

சிறிது நேரம் கழித்து குளக்கரைக்கு வந்த ரம்ஜான் பேகம், மகன் அங்கு இல்லாததால் சுற்றிமுற்றி தேடியுள்ளார். 

அப்போது குளக்கரையில் தனது மகனின் ஆடைகள் கிடந்துள்ளது. மகன் குளத்தில் மூழ்கியதை உணர்ந்த ரம்ஜான் பேகம் கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முகமது சபியுல்லாவை குளத்தில் இறங்கி தேடினர்.

மேலும், திருநள்ளாறு சுரக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் குளத்தில் இறங்கி சிறுவனை பிணமாக மீட்டனர். 

பின்னர், சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy drowned pond die issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->