குழந்தையின் உயிருடன் விளையாடிய உயிர் மீன் - கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவனகரே மாவட்டம் கஞ்சேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோகேஷ் - ரோஜா தம்பதியினர். இவர்களுடைய மகன் பிரதீக் நேற்று வீட்டில் மீன் தொட்டி சுத்தம் செய்திருந்த போது, அதில் ஒரு மீனை எடுத்து விழுங்கியுள்ளார். 

இந்த மீன் குழந்தையின் தொண்டையில் சிக்கியதனால், குழந்தை மூச்சு விடமுடியாமல் திணறியது. இதைப்பார்த்த பெற்றோர், தொண்டையில் சிக்கிய மீனை எடுக்க முயன்றும் முடியாததால், உடனே சிவமோகா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனர். 

ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை வசதி இல்லை என்றுக் கூறி, குழந்தையை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் தொண்டையில் 11.3 செ.மீ நீளமுள்ள மீன் இருப்பதைக் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து அந்த மீனை அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. உயிருக்குப் போராடிய 
11 மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குப் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy swallowed live fish in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->