"அவன் கூட என்ன சிரிப்பு..." ஆண்களுடன் சிரித்துப் பேசிய காதலி... வெட்டி வீசிய காதலன் கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் சித்திரை அடுத்துள்ள  சேஷாபுரம் என்ற கிராமத்திலுள்ள மாந்தோப்பில் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று   பெண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து சித்தூர் தாலுகா போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறையின் விசாரணையில் சடலமாக கிடந்த பெண் சித்தூர் மாவட்டத்தைச் சார்ந்த  கஸ்தூரி என்பதும் இவரது வயது 49 என்பதும்  தெரியவந்தது. இவருடைய கணவருடன் ஏற்பட்ட  தகராறு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அதே கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீராமுலு என்பவரும் ஆடு மேய்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கஸ்தூரி அப்பகுதியில் உள்ள சில ஆண்களுடன் சிரித்து பேசுவதை  ஸ்ரீராமுலு கண்டித்து இருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கஸ்தூரி ஆண்களுடன் பேசுவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி இருவரும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது  அவர்களுக்கிடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீராமுலு நான் வைத்திருந்த அரிவாளால் கஸ்தூரியின் கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை மாந்தோப்பில் வீசிவிட்டு தலைமறைவாக இருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வனப்பகுதியில் பதுங்கியிருந்து ஸ்ரீ ராமுழுவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  கஸ்தூரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boyfriend arrested for cutting girlfriend who was laughing with men and throwing her in deserted area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->