BPL குழுமத்தின் நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் மறைவு! - Seithipunal
Seithipunal


இந்திய மின்னணு நிறுவனமான பி.பி.எல். குழுமத்தின் நிறுவனர் டி.பி. கோபாலன் நம்பியார் இன்று மறைந்துள்ளார்.

கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நம்பியார், இன்று காலை உயிரிழந்தார். அவரின் வயது 94.
 
இவரின் மறைவை அவரது குடும்ப வட்டாரங்கள் அறிவித்து உள்ளன. டிபிஜி (DPG)" என்று பரவலாக எல்லோராலும் அழைக்கப்படும் நம்பியார், பாஜக தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நபியரின் மறைவுக்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "BPL பிராண்டின் நிறுவனர் டிபிஜி நம்பியாரின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுங்காலமாக நெருங்கிப் பழகிய அவரின் பெரும் பங்களிப்புகள் நினைவில் நிற்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BPL Group founder DP Gopalan Nambiar passed away


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->