கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் தொட்டபெலா கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா என்பவருக்கும் தொட்டபல்லாபூரின் மூட்லகாளெனஹல்லி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 

அதன் படி, இருவருக்கும் துமகூரின் கோளாலா பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மணமகள் திவ்யாவும் மகிழ்ச்சியாக தான் இருந்தார். 

இந்த நிலையில், நேற்று காலை இருவருக்கும் சாஸ்திர சடங்குகள் அனைத்தும் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து வெங்கடேஷ் தாலி கட்டுவதற்கு முயன்ற போது திடீரென எழுந்து நின்ற திவ்யா, "எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் வேறு ஒரு இளைஞரை காதலிக்கிறேன்" என்று அனைவருக்கும் முன்பு தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு இரு தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், மண்டபத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன் படி போலீசார் இரண்டு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருப்பினும் திவ்யாவின் மனம் மாறாததால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bride stop marriage in banglore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->