தாலிகட்ட தயாரான மாப்பிள்ளை - நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்திலுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் - ஐஸ்வர்யா என்பவருக்கு திருமணம் செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் முடிவில் டிச-7 (அதாவது நேற்று) மணநாளாக குறிக்கப்பட்டது. இதற்கான அணைத்து ஏற்பாடுகளும் நடத்தப்பட்டு நேற்று திருமணமும் நடைபெற இருந்தது. 

அனால், தாலிகட்டும் நேரத்தில் மணமகள் ஐஸ்வர்யா அதனை தடுத்தார். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஐஸ்வர்யா கேட்காததனால், மணமகன் குடும்பத்தினர் தாலியும் கையுமாக பரிதாபமாக நின்ற மஞ்சுநாத்தை அழைத்துச் சென்றனர். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப பேச்சுவார்த்தையின் போது, ஐஸ்வர்யாவின் மேற்படிப்பு ஆசைக்கு தடைபோடாத மாப்பிள்ளை வீட்டார், கல்யாண நெருக்கத்தில் ஐஸ்வர்யா கல்லூரி செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், தாலிகட்டும் கடைசி நேரம் வரை மாப்பிள்ளையின் பதிலை எதிர்பார்த்திருந்த ஐஸ்வர்யா, சரியான பதில் கிடைக்காததால், தாலியையும், திருமண பந்தத்தையும் விலக்கி இருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதனால், பெண்கள் உயர்கல்வி பெறுவதில் நீடிக்கும் சவால்கள் குறித்தும், ஐஸ்வர்யாவின் திடமான முடிவை கொச்சைப்படுத்தும் வகையிலும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bride stop marriage in karnataga chiththoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->