செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த அண்ணன்.. தற்கொலை செய்து கொண்ட தங்கை.!
Brother condemned the use of cell phone sister committed suicide
செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளும்படி அண்ணன் கூறியதால் 18 வயதான இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டும்பிலி பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இரவு பகல் பாராமல் அப் பெண் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதனனை அந்தப் பெண்ணின் பெற்றோரும், அண்ணனும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போதும் அப்பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெண்ணின் சகோதரன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு சகோதரன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்ற சகோதரன் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தங்கை அறையில் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
Brother condemned the use of cell phone sister committed suicide