விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு! இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது- தமிழக அரசு - Seithipunal
Seithipunal


சென்னை: தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் தமிழ்நிலம் இணையவழி சேவையில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில், 28-ந்தேதி காலை 10 மணி முதல் 31-ந்தேதி மாலை 4 மணி வரை "தமிழ்நிலம்" மற்றும் "பட்டா மாறுதல் சேவைகள்" தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் சேவைகள்:

இந்த சேவைகளின் தற்காலிக நிறுத்தம் விவசாயிகளின் விவரப் பதிவேடு மற்றும் பட்டா மாறுதல் செயல்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றத்தை முன்னறிவிப்புடன் கவனத்தில் கொண்டு தங்களின் பணிகளை திட்டமிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சேவைகள் மீண்டும் செயல்படும் தேதி:
31-ந்தேதி மாலை 4 மணி முதல் இந்த சேவைகள் வழக்கமான முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important Notice for Farmers Patta website will not work for 4 days from today Tamil Nadu Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->