தேமுதிக அமைதி பேரணி - காவல்துறை அனுமதி மறுப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது உடலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதனால் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள். 

விஜயகாந்த் நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்று அன்னதானம் வழங்கப்படவுள்ளது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என்று அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், தடையை மீறி மாநில தேர்தல் அலுவலகத்தில் இருந்து பேரணி வர தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police no permission dmdk silent rally for vijayakant memorable day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->