காங்கிரசில் இணைந்த எம்எல்ஏ..! அப்ப... ஒரு இடைத்தேர்தல் உறுதியா?!
BRS Congress MLA Revanth Reddy Chevella Kale Yadaiah
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கானா சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான (64) தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஆளுங்கட்ச்சியாக இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. அதே சமயத்தில் பாஜக 8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் எட்டு இடங்களில் வெற்றி பெற்றன.
தேர்தலுக்கு முன்பிலிருந்தே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் மீதும், ஆட்சியின் மீதும் தொடர்ந்து பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வந்தது. அதை பயன்படுத்தி காங்கிரசும் சந்திரசேகர் ராவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது.
இது தேர்தலில் பிரதிபலிக்கவே, காங்கிரஸ் கட்சி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆட்சியையும் அமைத்தது. தற்போது சந்திரபாபு ராவ் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வரும் நிலையில், அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் செயலற்று போய் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா தெலுங்கானாவின் காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர் பக்கத்தில் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதிக்கு பெரும் பின்னடைவு இது. எம்.எல்.ஏ.வான செவெல்லா காலே யாதய்யா இன்று காங்கிரஸில் இணைந்தார்.
அவருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்தார். அவருடன் தெலுங்கானா கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்சி மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் யாதய்யா ஆளும் கட்சியில் இணைந்தார்" என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பிஆர்எஸ் எம்எல்ஏ இணைந்தாலும், அவர் கட்சி தாவல் சட்டத்தின் படி அவரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அவரின் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
BRS Congress MLA Revanth Reddy Chevella Kale Yadaiah