தங்க சங்கிலியை விழுங்கிய எருமை மாடு - மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்.!
buffalo swallows gold chain in maharastra
தங்க சங்கிலியை விழுங்கிய எருமை மாடு - மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாசிம் மாவட்டம் சார்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் ஹரி. இவர் சோயா பீன்ஸ்களை தனது வயலில் விதைத்துள்ளார். இந்த நிலையில், ராம் ஹரியின் மனைவி கீதாபாய் கடந்த மாதம் 27 ஆம் தேதி மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக சென்ற போது தனது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை கழற்றி சோயாபீன் தோல்கள் இருந்த தட்டில் வைத்துள்ளார்.
இதையடுத்து கீதாபாய் அங்கிருந்த எருமை மாட்டிற்கு சோயாபீன் தோல்களை கொடுத்துள்ளார். அப்போது தட்டில் வைத்திருந்த தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியும் தங்கச் சங்கிலி கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், எருமை மாடு தங்கச் சங்கிலியை விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. உடனே சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் படி விரைந்து வந்த மருத்துவ குழுவினர், எருமை மாட்டின் வயிற்றை சோனோகிராப் கொண்டு பரிசோதனை செய்தபோது, உள்ளே தங்க நகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை எருமை மாட்டின் வயிற்றிலிருந்து மீட்டனர்.
மீட்கப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது. எருமை மாடு, தங்கச் சங்கிலியை விழுங்கி அது மீண்டும் மீட்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
buffalo swallows gold chain in maharastra