விடிய விடிய பெய்த கனமழை! விடிந்து விழுந்த குடியிருப்பு! பாட்டியுடன் 2 பேத்திகளும் பலி! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து பாட்டியுடன் இரண்டு பேத்திகளும் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் தேவ பூமி துவாரகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை கனமழை வெளுத்து வாங்கியது. குஜராத் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. துவாரகா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக அங்குள்ள ஜாம் கம்பாலியா நகரில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குஜராத் மாநிலத்தின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து போலீஸ், தீயணைப்பு வீர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

படுகாயம் அடைந்த ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இடர்பாடுகளில் சிக்கிய  மற்றவர்களைத் தேடும் பணியில் விடிய விடிய நடைபெற்றது. இந்த நிலையில் இடர்பாடுகளில் சிக்கி 60 வயதான மூதாட்டியும் அவரது பேத்திகளான இரண்டு சிறுமிகளும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

building collapsed due to heavy rains in Gujarat killing a grandmother and her two granddaughters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->