பெண்களை உயிரோடு மண்ணில் புதைத்த கொடூரம் - நடந்தது என்ன?
burying 2 womans of dumping gravel in madhya pradesh
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் சாலை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பெண்கள் மண் சுமந்து நின்ற டிரக்கின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போராட்டத்தை விட்டு செல்லுமாறு அங்கிருந்தவர்கள் பலமுறை கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்த நிலையில் இரண்டு பெண்களின் மீதும் அந்த டிரக்கில் இருந்த மண்ணைக் கொட்டியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் முழுவதுமாக புதைந்தனர்.
இதைப்பார்த்த கிராமவாசிகள் அந்த பெண்களை மீட்டு, சிகிச்சைக்காக நலவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே இரண்டு பெண்களும் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தபட்ட டிரக்கைக் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புரைய ஒருவரை கைது செய்ததுடன் தப்பியோடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
burying 2 womans of dumping gravel in madhya pradesh