450 கோடி ஊழல் புகாரில் சிக்கிய சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள்..?
Shubman Gill and Sai Sudarshan under CID Scanner
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்,தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன், ராகுல் திவாட்டியா, மோகித் சர்மா ஆகியோர் ரூ.450 கோடி சிட்-பண்ட் ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நால்வருக்கும் குஜராத் சிஐடி சம்மன் அனுப்ப உள்ளதாக ஃப்ரீ பிரஸ் ஜோர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களான சுப்மான் கில், ராகுல் திவாடியா, மோஹித் சர்மா மற்றும் பி சாய் சுதர்சன் ஆகியோர் முதலீடு செய்த பணம் திருப்பித் தரவில்லை என்று தெரியவந்துள்ளது.
சிஐடி அதிகாரிகளின் கூற்றுப்படி, அகமதாபாத் மிரர் அறிக்கையின் படி, குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் கில் ரூ.1.95 கோடி முதலீடு செய்துள்ளார் என்றும், மற்ற வீரர்கள் கணிசமாக சிறிய தொகையில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட் ஃபண்ட் ஆன போன்சி திட்டங்களின் மன்னரான பூபேந்திரசிங் ஜாலாவிடம் குஜராத் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜாலாவின் கணக்குகளை கையாண்ட ருஷிக் மேத்தாவை சிஐடி அதிகாரிகள் பிடித்துள்ளாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர், சிஐடியின் முதற்கட்ட விசாரணையில் ஜாலா 6000 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
ஜாலா ஒரு அதிகாரப்பூர்வமற்ற கணக்கு புத்தகத்தையும் பராமரித்துள்ளதாகவும், அதை சிஐடி குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் ரூ. 52 கோடி எனவும், தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், மொத்தத் தொகை ரூ. 450 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், ரெய்டுகள் தொடரும் போது இவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
English Summary
Shubman Gill and Sai Sudarshan under CID Scanner