பயணசீட்டு கேட்டு கன்னத்தில் அறைந்த பெண் பயணி - ஆத்திரத்தில் நடத்துனர் செய்த வெறிச்செயல்.!
bus conductor attack woman passenger in karnataga
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பிறகு, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்றான கர்நாடக மாநிலம் முழுவதும் மாநகர மற்றும் புறநகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது.
இந்த பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் கர்நாடக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை நடத்துநரிடம் காட்டி இலவச பயண சீட் பெற்றுக் கொண்டு பயணம் செய்யலாம். இந்த நிலையில், பெங்களூருவில் சமீபத்தில் பிலக்கள்ளி பகுதியிலிருந்து சிவாஜி நகருக்குச் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில், தஞ்சிலா இஸ்மாயில் என்ற இளம்பெண் ஏறியுள்ளார்.

பின்னர் அவர் நடத்துநரிடம் பயணசீட்டு கேட்டபோது, நடத்துநர் டிக்கெட் வழங்காமல், ஆதார் அட்டை கொடுங்கள்" என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் இரண்டு ஸ்டாப் கடந்து சென்ற பிறகு மீண்டும் பயண சீட் கேட்டுள்ளார். அப்போது நடத்துனர், "ஸ்டேஜ் முடிகிறது, ஆதார் அட்டை காண்பித்து இலவச பயண சீட் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பணம் செலுத்தி பயண சீட் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனால், இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அப்பெண் நடத்துநரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து கோபமடைந்த நடத்துநர் இளம் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
bus conductor attack woman passenger in karnataga