ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - ஓட்டுனருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா நோக்கி தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்றுச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து நேற்று நள்ளிரவு ஹைதராபாத் நகரில் இருந்தபோது பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் பயணம் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார்விரைந்து வந்து அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுனரை கைது செய்ய முயன்றனர். 

அதற்குள் பேருந்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

"தப்பியோடிய ஓட்டுநர் ஓடும் பேருந்தில் அந்த பெண்ணின் வாயில் போர்வையை வைத்து அடைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அப்போது பயணிகள் பலரும் அந்த பேருந்தில் இருந்துள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த மற்றொரு ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus driver harassment to young woman in telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->