அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம் - புதுச்சேரியில் அமல்.!
bus ticket price increase in puthuchery
புதுச்சேரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசை பேருந்தை உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் இயங்கும் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே மாநகர பேருந்துகளில் ரூ.5 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் இனி ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.13 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு நிதித்துறை ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவினை போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளரான சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.
English Summary
bus ticket price increase in puthuchery