"மருமகள் எங்களுடன் இல்லை.. உரிமை மட்டும் அவருக்கா..?" - வீர மரணம் அடைந்த கேப்டன் அன்ஷூமான் சிங்கின் பெற்றோர் பேட்டி..!!
Captain Anshuman Singh Parents Questioned About NOK Rules
இந்திய ராணுவத்தின் 26 ஆவது பஞ்சாப் படைப்பிரிவில் சியாச்சின் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர் கேப்டன் அன்ஷூமான் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி சியாச்சின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வீரர்களையும், மருத்துவ உபகரணங்களையும் மீட்ட போது தீயில் சிக்கி வீர மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கேப்டன் அன்ஷூமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அன்ஷூமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு "கீர்த்தி சக்ரா" விருதினை வழங்கினார்.
இந்நிலையில் கேப்டன் அன்ஷூமான் சிங்கின் தந்தை ரவிப்ரதாப் சிங் மற்றும் தாய் மஞ்சு சிங் ஆகியோர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் மகனுக்கும், மருமகளுக்கும் திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகின்றன. அவர் இப்போது எங்களுடன் வாழவில்லை. மேலும் அவர்களுக்கு குழந்தையும் இல்லை.
எங்கள் மகனின் மரணத்திற்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உரிமைகளை எங்கள் மருமகள் தான் பெறுகிறார். எங்களிடம் எங்கள் மகனின் புகைப்படத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே எங்களை போல் பிற வீரர்களின் பெற்றோர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக NOK யின் வரைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
NOK என்பது ராணுவத்தில் இறந்த ஒரு வீரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி யாருக்கு சேரும் என்பதைக் குறிக்கிறது.
English Summary
Captain Anshuman Singh Parents Questioned About NOK Rules