ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!
Case against Hindenburg in Supreme Court
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் இந்தியாவின் அதானி குழுமங்கள் தொடர்பான மோசடிகளை அறிக்கையாக வெளியிட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதானி குழுமம் தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்ததால் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
இந்த நிலையில் எம்.எஸ். ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் "ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் மற்றும் அவரை சார்ந்தவர்களும் ஷார்ட் செல்லிங் எனும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து அதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளனர்.
இவர்கள் உள்நோக்கத்துடன் செயல்பட்டு அதன் வாயிலாக அப்பாவி முதலீட்டாள்களையும் இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதன் குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே நேத்தன் ஆண்டர்சன் மற்றும் அவர் சார்ந்த நபர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கூடிய விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத.
English Summary
Case against Hindenburg in Supreme Court