விசைப்படகில் மீன்பிடித்த 41 பேர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


விசைப்படகில் மீன்பிடித்த 41 பேர் மீது வழக்குப்பதிவு.!

ஒவ்வொரு ஆண்டும் கடல்களில் மீன் வளத்தை பெருக்குவதற்காக மீன்பிடி தடைகாலம் விதிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் விசைப்படகில் சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

அதன் படி, இந்த வருடம் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் விதிகளை மீறி சிலர் விசைப்படகில் சென்று் மீன்பிடித்து வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. 

அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உரணில் உள்ள கரஞ்சா துறைமுகம், ராய்காட்டில் உள்ள ரேவாஸ், திகோட், போட்னி மற்றும் வரேடி, மும்பை மாகோல் உள்ளிட்ட இடங்களில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்து வருவது உறுதியானது. 

இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தடையை மீறிய மீன்பிடித்த நாற்பத்தொரு விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on forty one fishermans in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->