நடுரோட்டில் சிறுநீர் கழித்த வாலிபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அதில், வாலிபர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சாலையோர தடுப்பு சுவரில் சிறுநீர் கழிக்கிறார்.

அதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தட்டிக்கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் காரில் ஏறி அமர்ந்து ஆடையை கழற்றி வாகன ஓட்டியை நோக்கி ஆபாச செய்கை காட்டி அங்கு இருந்து தப்பித்துச் செல்கிறார். காரில் மேலும் ஒரு வாலிபர் மதுபாட்டிலுடன் இருந்துள்ளார். 

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடுரோட்டில் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட வாலிபர் புனேயை சேர்ந்த ஓட்டல் அதிபர் மனோஜ் அகுஜாவின் மகன் கவுரவ் அகுஜா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக கவுரவ் அகுஜா மற்றும் அவருடன் காரில் இருந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case file popular hotel owner son for urine at midroad in pune


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->