SBI அறிவிப்புக்கு ஆப்பு.. ₹2,000 நோட்டுகள் மாற்ற ஆவணங்கள் தேவையில்லையா..? டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட உள்ளன. தனிநபர் ஒருவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எவ்வித அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு தன்னிச்சையானது, நியாயமற்றது, சமத்துவ உரிமைக்கு எதிரானது, என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

பொருளாதாரக் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம் ரிட் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against SBI notification no documents needed for Rs2000 notes exchange


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->