மதுபான கொள்கை வழக்கு : கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. 

கைது செய்யப்பட்ட அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து, ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. 

முதல்வர் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ கைது காரணமாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தனது விசாரணைகளை முடித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbi charge sheet aubmit against aravind kejriwal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->