கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Seithipunal
Seithipunal


கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய சதிகாரரே அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையில் கெஜ்ரிவாலியின் ஜாமின் மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்  நீதிமன்ற காவலை ஆகஸ்ட்  எட்டாம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI files chargesheet against Kejriwal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->