நீட் தேர்வு முறைகேடு : வழக்குப் பதிவு செய்த சி. பி. ஐ ..!! - Seithipunal
Seithipunal


மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5 ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடந்த இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து இந்த  தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது.

இதையடுத்து நீட் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. பீகார், ராஜஸ்தான், உ. பி., ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு வினாத்தாள் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனையானதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து மாணவர்கள் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையை உச்ச நீதி மன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட யூஜிசி நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்ததாக கூறி மத்திய அரசு அந்த தேர்வை ரத்து செய்தது.

நெட் தேர்வு வினாத்தாள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானதாக தெரிய வந்துள்ளது. இந்த தேர்வுகளில் நடந்த முறைகேடுகளால் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக ரத்து செய்துள்ளது. 

இதனிடையே , நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இது தொடர்பாக  சி. பி. ஐ இன்று வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI Files FIR in NEET Malpractice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->