நிலக்கரி சுரங்கம் முறைகேடு தொடர்பாக ஆஜராகும்படி மம்தா உறவினருக்கு அமலாக்கத்துறை சம்மன்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது, நிலக்கரி சுரங்க முறைகேடு மற்றும் இது தொடர்பாக பல கோடி ரூபாய் வங்கி பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ந்து சுரங்க ஊழலில் ரூ.1,300 கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகாவின் வங்கிக்கணக்கில் 10 கோடிக்கு மேலாக தொடர்ச்சியாக பண பரிமாற்றம் இருந்துள்ளதால், அபிஷேக் பானர்ஜி மற்றும் மேனகாவிற்கு வரும் 2ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI issued summon to Abhishek Banerjee in coal scam case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->