திருவாரூர்: என்ஐஏ சோதனையில் சிக்கிய பாபா பக்ருதீன்! அதிரடி கைது, அதிர்ச்சி பின்னணி!
Thiruvarur NIA Arrest
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாபா பக்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பாபா பக்ருதீனின் வீட்டில் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், அவரது வீட்டில் இருந்து பென் டிரைவ் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.