நாட்டையே உலுக்கிய.. மணிப்பூர் வீடியோ விவகாரம்.! சிபிஐ வழக்கு பதிவு.!!
CBI registered case on manipur video issue
இந்தியாவையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின் போது பழங்குடியின பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஏற்கனவே மணிப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.
இந்த நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் காரணமாக மணிப்பூர் மாநில போலீசாரிடம் உள்ள அனைத்து ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்பொழுது சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சிபிஐ அதிகாரிகள் தங்களின் புலன் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CBI registered case on manipur video issue