தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - சி.பி.எஸ்.இ அதிரடி உத்தரவு.!
cbse announce another chance to 12th class student for no write exam
நாடு முழுவதும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நாளை இந்தி தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட இருப்பதால் இந்த தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது.
அப்படி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளதாவது:-
"நாட்டின் பல பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சில பகுதிகளில் நாளை 15-ந்தேதி கொண்டாடப்படவோ அல்லது 15-ந்தேதி வரை கொண்டாட்டங்கள் நீடிக்கவோ வாய்ப்புள்ளதாக சி.பி.எஸ்.இ.க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் திட்டமிட்ட அட்டவணைப்படி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 15-ந்தேதி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மற்றொரு தேதியில் தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அதாவது, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான வாரியத்தின் கொள்கையின்படி, சிறப்புத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் சேர்ந்து இந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
cbse announce another chance to 12th class student for no write exam