வயநாடு நில சரிவிலும் மத்திய பாஜக அரசியல் செய்கிறது - செல்வப்பெருந்தகை காட்டம்!
Central BJP is also doing politics in Wayanad land collapse Selvaperunthagai
வயநாடு நில சரிவிலும் மத்திய பாஜக அரசியல் செய்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் பயணிசெட்டிப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை பேசுகையில்,
ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்க்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, ஆகியவை மூலம் நசுக்கும் பணியில் மத்திய பாஜக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இதேபோல்தான் முன்பு தெலுங்கு தேசம் கட்சியை எம்பிகள் சிலர் வீட்டில் மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை ஏவி விட்டு சோதனை நடத்தினர். தற்போது அவர்கள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்துள்ளனர்.
கேரளாவில் பேரிடர் நடப்பதாக தெரிவித்திருந்தால் ஏன் அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை. மத்திய பாஜக வயநாடு நிலசரிவிலும் அரசியல் செய்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
English Summary
Central BJP is also doing politics in Wayanad land collapse Selvaperunthagai