மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
Central Government Employees
தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே மத்திய அரசின் 'சி' பிரிவு - கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46% ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central Government Employees