பின்வாங்கியது மத்திய அரசு! எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மத்திய அமைச்சர் எழுதிய கடிதம்!
central government Ministry LateralEntry
மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு செய்து உள்ளதாக, காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதற்க்கு பாஜக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பதிலில், ஏற்கனவே, மத்திய அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் வல்லுனர்களை நேரடியாக நியமிக்கும் முறை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் கொண்டு வந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டில் இணைச்செயலாளர் நிலையில் 10 அதிகாரிகளை இந்த முறையில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர் பதவிகளில் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்ய மத்திய பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நேரடி நியமனத்துக்கான முறையையை நிறுத்தி வைக்க கோரியும் அந்த கடிதத்தில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
central government Ministry LateralEntry