கேரளா முதல்வரின் அபுதாபி பயணத்திற்கு மத்திய அரசு தடை.! - Seithipunal
Seithipunal


கேரளா முதல்வரின் அபுதாபி பயணத்திற்கு மத்திய அரசு தடை.!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ள அபுதாபியில் வருகிற 8-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதேபோன்று மாநாட்டில் கலந்துகொள்ள கேரள அமைச்சர் முகமது ரியாஸ், கேரள அரசு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளார். 

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "முதலமைச்சர் கலந்துகொள்ளும் அளவிற்கு அது முக்கியமான மாநாடு போல் தெரியவில்லை" என்று பதில் அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரிகள் மட்டும் செல்லலாம் என்று அறிவுறுத்தியது. 

இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகத்தின் சார்பில், இந்தக் கோரிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலகம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முடிவில் தலையிட முடியாது என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளது. 

அபுதாபியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதாக முன்னதாகவே வாக்கு கொடுத்திருந்த கேரள முதல்வர் தற்போது செல்ல முடியாத சூழல் எழுந்துள்ளது பெரும் சர்ச்சையாகவே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government not permission to binarayi vijayan for go to abhudabi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->