உபேர், ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் டாக்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்தச் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தெரிவித்தனர்.

இந்தப் புகார்கள் மத்திய அரசின் கவனத்திற்கு வந்தததையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், இந்த புகார் குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது:-

"வாடிக்கையாளர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பதிவுசெய்வதில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சம்பந்தபட்ட நிறுவனங்களின் கட்டண அறிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு உபேர், ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government notice send to ola uber companies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->