ஆன்லைன் நிறுவனங்களுக்கு அதிரடி தடை விதித்த மத்திய அரசு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் மக்கள் ஆன்லைனில் (பிளிப்கார்ட், அமேசான்) பொருட்களை வாங்குவது சாதாரணமான செயலாகி வருகிறது. அதனால், ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் சில பானங்களின் வகைகளுக்கு துல்லியமான லேபிளிங் வார்த்தையை பயன்படுத்த வலியுறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "பால், தானியங்கள் அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் அல்லது ஆற்றல் பானங்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. நாட்டின் உணவு சட்டங்களுக்குள் ஆரோக்கிய பானம் என்ற வார்த்தைக்கான தெளிவான வரையறை இல்லாததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, “எனர்ஜி டிரிங்க்" என்பது ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி கார்பனேற்றம் மற்றும் கார்பனேற்றம் செய்யப்படாத நீர் சார்ந்த சுவை கொண்டபானங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், தவறான வார்த்தைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதை உணர்ந்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த உத்தரவை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது.

2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், உணவுத் தொழிலை நிர்வகிக்கும் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குள் ஹெல்த்டிரிங்க் என்ற சொல் தரநிலைப் படுத்தப்படவில்லை. மறுபுறம் எனர்ஜி டிரிங்க் குறிப்பிட்ட அளவுகோல்களுக்குள் வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government order to flipkart and amezon no use energy drink word


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->