விவசாயிகளுக்கு குட் நியூஸ் - கரும்பு கொள்முதல் விலை உயர்வு.!
central government rise sugarcane fair price
நாட்டில் கரும்பு கொள்முதல் விலை 8 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை 2024-25 நிதியாண்டிற்கானது ஆகும். இந்த புதிய விலை உயர்வு அக்டோபர் மாதம் அமலுக்கு வர உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 315-இல் இருந்து ரூ. 340 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/sugar 13.png)
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "விவசாயிகள் நலன் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே எங்களது அரசு இயங்கி வருகிறது. வரவிருக்கும் கரும்பு சீசன் அக்டோபர் 1, 2024 அன்று துவங்குகிறது.
அதன்படி அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30, 2025 ஆண்டு வரை புதிய விலை அமலில் இருக்கும். கடந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 315 ஆக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் இந்த விலை ரூ. 340 ஆக உயர்த்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
English Summary
central government rise sugarcane fair price