காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம்..!! தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி உட்பட பல்வேறு நதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல மாநிலங்களில் நீர் பற்றாக்குறை குறையும். குறிப்பாக தமிழகத்தின் நீர் பாசனம் குடிநீர் பற்றாக்குறை நீங்க வாய்ப்புள்ளது. அதற்காக கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மாநில எல்லையில் இருந்து 1,465 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இந்த கால்வாய் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையுடன் காவிரியில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக மத்திய அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிட்டது. இதில் 54 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களின் அனுமதி அவசியம்.

இந்த திட்டம் குறித்தான விரிவான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கடந்த முறை நடைபெற்ற காவிரி கோதாவரி இணைப்பு கால்வாயை கரூர் கட்டளை கதவணை அருகே இணைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை தேசிய நதி நீர் மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனை அடுத்து தற்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் கால்வாயின் உயரம் 50 மீட்டராக இருக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை பரிசளிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் நதிநீர் இணைப்பு செயல்படுத்த மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் தேசிய நீர் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விரைவில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt accept request of the TNGovt in Cauvery link Project


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->