இன்று முதல் 7 நாட்களுக்கு "நல்லாட்சி வாரம்" கடைபிடிக்க மத்திய அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


இன்று முதல் 25-ந் தேதி வரை நாடு முழுவதும் "நல்லாட்சி வாரம்" ஆக கடைப்பிடிப்பதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள் மற்றும் தாலுகா அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதில், சுமார் 700-க்கு மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும், உயர் அதிகாரிகள் தாலுகா தோறும் சென்று குறைதீர்ப்பு முகாம்களை பார்வையிடுகிறார்கள். 

அதன் படி, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், கலந்துகொண்டு இந்த நல்லாட்சி வாரத்தை தொடங்கிவைக்கிறார். 

இதுவரைக்கும் மத்திய அரசின் குறைதீர்ப்பு இணையதளத்தில் சுமார் 81 லட்சத்து 27 ஆயிரம் கோரிக்கை மனுக்களும், மாநில அரசுகளின் குறைதீர்ப்பு இணையதளங்களில் 19 லட்சத்து 48 ஆயிரம் கோரிக்கை மனுக்களும் வந்துள்ளன.

மக்களின் இந்த கோரிக்கைகளை நல்லாட்சி வாரத்தின்போது, மத்திய மற்றும் மாநில இணையதளங்கள் இணைந்து செயல்பட்டு தீர்த்து வைக்கும். மேலும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் புதிதாக 3 ஆயிரத்து 120 சேவைகளை அடையாளம் கண்டுள்ளனர். அந்த சேவைகளையும், ஆன்லைன் சேவையில் சேர்க்கப்பட உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt adherent Good governance week today onwards


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->