பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு.. நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிப்பு-மத்திய அரசு.!
Central govt Honour to Latha Mangeshkar funeral
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
92 வயதான பழம் பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று, நிமோனியா உள்ளிட்டவற்றில் இருந்து மீண்டு வந்த அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியதால், அவருக்கு ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் மூலம் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டடு, மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கரின் உயிர் பிரிந்ததாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20-க்கும் அதிகமான மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் குறிப்பிடத்தக்கது.
லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மறைந்த நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி சடங்கு மும்பை சிவாஜி பார்க் பகுதியில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
English Summary
Central govt Honour to Latha Mangeshkar funeral