தேர்வுதாள்களில் பாடல்களை எழுதிய மாணவன்! அதிரடியாக மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்!
chandigarh university student writes song lyrics in exam sheet professor gave him intersting scores
பஞ்சாப் மாநிலத்தின் சண்டியர் பல்கலைக்கழக தேர்வின் போது மாணவர் எழுதிய விடைத்தாளிற்கு ஆசிரியர் ஒருவர் பதிலளித்திருப்பது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக தேர்வில் தான் ருசிகர சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுஉள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வின் போது மாணவர் ஒருவர் விடை தெரியாததால் சினிமா பாடல்களை விடையாக எழுதி இருக்கிறார். அந்த விடைத்தாளில் 3 இடியட்ஸ் படத்தில் வரும் "கிவ் மீ சம் சன் சைன்" மற்றும் பிகே படத்தில் வரும் "பகவான் ஹை கஹன் ரே தோ" ஆகிய பாடல்களை எழுதி வைத்துள்ளார்.
விடைத்தாளை திருத்தும் போது ஆசிரியர் இதனை கண்டுபிடித்து விட்டார். சிகப்பு பேனாவால் மேலிருந்து கீழ் வரை ஒரு கோடு போட்டு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் அளித்திருக்கிறார். மேலும் அந்த மாணவருக்கு அறிவுரை வழங்கும் விதமாகவும் விடைத்தாளின் மீது எழுதிருக்கிறார் ஆசிரியர்.
நல்ல எண்ணம் தான் ஆனால் இங்கு நடக்காது என குறிப்பிட்டுள்ள ஆசிரியர். இன்னும் கொஞ்சம் அதிகமாக விடைகளை எழுதி இருக்கலாமே என கிண்டலுடன் தெரிவித்துள்ளார். பாடலை எழுதிய மாணவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கியதுடன் ஆசிரியர் அறிவுரையும் வழங்கிய நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
English Summary
chandigarh university student writes song lyrics in exam sheet professor gave him intersting scores