சந்திரபாபு நாயுடு ஜாமின் மனு: ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Chandrababu Naidu bail Andhra High Court order
தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடு உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கி கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
இதற்கு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரப்பட்டிருந்தார். அந்த மனு பரிசீலனை செய்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.
பின்னர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று சாதாரண ஜாமின் வழங்கியுள்ளது. இதனை வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, சந்திரபாபு நாயுடு இடைக்கால ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chandrababu Naidu bail Andhra High Court order