இவர்களை நாம் மறந்து விடக்கூடாது.!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உருக்கம்.!! - Seithipunal
Seithipunal


 எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களை மறந்து விடக்கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "கடந்த சில நாட்களுக்கு முன் நமது பாதுகாப்புப்படையை சேர்ந்த 4 வீரர்களை நாம் இழந்துள்ளோம்.
நாம் இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த குளிரில் எல்லையில் பணிபுரிந்து நம்மையும், நம் நாட்டையும் பாதுகாக்கும் வீரர்களை நாம் மறந்துவிடக்கூடாது. பாதுகாப்புப்படையினரின் தியாகத்தால் தான் நாம் குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது" என உருக்கமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrachud said that soldiers on border security duty should not be forgotten


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->