நிலவில் பாயும் சந்திரயான்-4: அப்டேட் கொடுத்த இஸ்ரோ!
chandrayaan 4 Isro update
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா, ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. லூபெஸ் என்னும் பெயரில் செயல்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்தில் ரோபோட் தொழில்நுட்பத்தினால் ஆன ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்திருப்பதாவது, சந்திரயான்-4 திட்டத்தில் இந்தியா லேண்டரையும் ஜப்பான் ரோவரையும் வடிவமைக்க உள்ளது.
இதன் ஆயுட்காலம் 6 மாதங்கள். இது முந்தைய திட்டங்களை விட மிகவும் சவாலானதாகும். ஏனென்றால் விண்கலன் நிலவில் தரையிறங்கி பின்பு மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கு 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள ரோவரின் எடை 350 கிலோவாகும். இதன் மூலம் நிலவில் உள்ள மண் துகள்கள், நீர் மூலக்கூறுகள் போன்றவற்றை எளிதாக சேகரிக்க முடியும்.
அனைத்து பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனை தொடங்க உள்ளது. நிலவில் தென் துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்ச்சி செய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
English Summary
chandrayaan 4 Isro update