இன்னும் சற்று நேரத்தில்.. அடுத்த கட்டத்திற்கு.. நிலவை நெருங்கும் சந்திராயன்.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் உருவாக்கி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5வது முறை வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டு அதனை அடுத்து சந்திரயான் விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது. தற்போது நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. மேலும் சந்திராயன் மின் களம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக  தரையிறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் செயல் திட்டம் இன்று இரவு 11 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன்–3ன் லேண்டார் கருவி நிலவில் தரையிரங்கிய பின் ரோவர் என்கிற ரோபார்ட் வடிவிலான செயல்பாடு பிரிந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டத்தை, இந்தியா மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrayaan3 to be sent to 2nd phase of the lunar orbit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->