விண்ணில் பாய இருக்கும் சந்திரயான்-3 - நாளை கவுன்டவுன் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


விண்ணில் பாய இருக்கும் சந்திரயான்-3 - நாளை கவுன்டவுன் ஆரம்பம்.!

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 என்றத் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். 

இந்தச் சந்திரயான்-3 விண்கலம் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. 
 

இந்த நிலையில், சந்திரயான் - 3 திட்டத்திற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான் - 3 திட்டத்திற்கான கவுண்ட்டவுன் 26 மணி நேரம் இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளனர். 

மேலும், இது தொடர்பாக சந்திரயான்-1-ன் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது:- "சந்திரயான் வெற்றி சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா தேசிய அளவில் முக்கியத்துவமான பங்கை ஆற்றி வருகிறது. ஆகவே இந்த பணி மிக மிக முக்கியமானது என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrayan 3 countown start at tomarrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->